வைத்தியசாலைக்கு கலாசாரம் மாற்றப்பட வேண்டும் – ரோஹித!!

கைது நடவடிக்கையின்போது அரசியல் வாதிகள் வைத்தியசாலைக்குள் ஓடி ஒளியும் கலாசாரம் மாற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உரிய கவனம்செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வெள்ளைவேன் சாரதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டவர்கள் தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள்.

அவ்வாறானவர்களுடன் இணைந்தே முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அரசியல்  குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

கடந்த  காலங்களில் தொடர்ந்து பல தரப்பினர் மீது  நிரூபிக்கப்படாத பல குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்தார். அதன் பிரதிபலனையே தற்போது அனுபவிக்கின்றார்” என்றும் கூறினார்.


Recommended For You

About the Author: Editor