டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் சாணி அடி!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) காலை போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 1045வது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போராட்ட கொட்டகை முன்பாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியாவில் நாளையதினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் (28) ஊடக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் படத்திற்கு சாணி வீசியதுடன் விளக்குமாறு, தும்புத்தடியினால் அடித்து, காரி உமிழ்ந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டிருந்தனர்.


Recommended For You

About the Author: Editor