வழிபாட்டிடம் என்ற பெயரில் சாராயக்கடை தொடர்ந்து இயங்குமாம்!

தமிழ்த் தேசத்தில், அதுவும் ஆன்மீக தலம் எனக் கூறப்படும் – மக்கள் கூடும் இடம் ஒன்றில் – ஆலயம் என்ற பெயரில் போதை ஊக்குவிப்பு மையம் நடத்துபவர்கள் தம்மைத் திருத்துவதற்கு பதிலாக மீண்டும் அதைச் செய்வோம் என பகிரங்கமாகக் கூறியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு, அதுவும் சைவ சமயத்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ள இந்த அறிவிப்பு தொடர்பாக நல்லூர் பிரதேச செயலக போதை ஒழிப்பு பிரிவின் பதில் என்ன?

போதை ஒழிப்பு எனக் கூக்குரல் இடுகின்ற எத்தனை அமைப்புக்கள் இந்த அறிவிப்புக்கு எதிராக தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளன?

ஆன்மீகம் என ஆங்காங்கே பிரச்சாரம் செய்பவர்கள் இந்த விடயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?

யாழ்ப்பாணத்;தில் உள்ள சைவ, இந்து அமைப்புக்களும் நல்லூர் சாயி மந்திர் முன்னெடுக்கும் இந்தச் செயற்பாட்டை ஆதரிக்கிறீர்களா?

மதம் என்ற பெயரில் யாழ்ப்பாணச் சமூகத்தை சீரழிப்பதற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த போலி வழபாட்டு முறைகளை இனியும் ஆதரிக்கப்போகின்றீர்களா?


Recommended For You

About the Author: Editor