உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை!!

உலர்ந்த பழங்கள் உட்பட பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அந்தவகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

உள்நாட்டு விவசாயிகளுக்கு நமையளிக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் உள்நாட்டு உற்பத்தியை முறையாக அதிகரிக்க அரசாங்கம் விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.

எனவே தற்போதைய அரசாங்கம் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் என உறுதியாக கூறினார்.


Recommended For You

About the Author: Editor