வேலைவாய்ப்பு செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை – நா.வேதநாயகன்!

மாவட்ட செயலாகத்தால் வருடாந்தம் மாவட்ட ரீதியாக பிரதேச செயலகங்கள் ஊடக திரட்டப்படும் வேலையற்றோர் தொடர்பான தரவுகளை சேகரித்தல் ஒரு வழமையான செயற்பாடாகும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்டும் செய்திகள் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தம்மால் சேகரிக்கப்படும் தகவல் சேகரிப்பிற்கும் வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor