பெண் ஆளுநரின் அதிரடி நடவடிக்கைகள்!!

மக்கள் குடியேற வசதியாக அக்குறுகொடவில் உள்ள அருப்பிட்டிய நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள நிலங்களை சுத்தம் செய்து அபிவிருத்தி செய்யுமாறு மேல் மாகாண ஆளுநர் டொக்டர் சீதா அரபேபொல அறிவுறுத்தியுள்ளார்.

பத்தரமுல்லவில் ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு இவ்விடயங்களை பார்வையிட்ட பின்னரே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும், குறித்த பகுதியில் உள்ள பூங்காவை அபிவிருத்தி செய்யுமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆளுநர் டொக்டர் சீதா விரைவு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மிரள்வதாக கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor