பௌத்த பிக்கு ஒருவர் திடீர் கைது!!

மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு மதுபோதையில் இருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதிக மது போதையில் குறித்த பிக்கு தகாத வார்த்தைகள் பேசிய வண்ணம் இருந்ததை கண்ட பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பௌத்த குருவை கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சட்ட வைத்திய அதிகாரி பரிசோதித்த போது அவர் அதிகளவான மது அருந்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று 30ஆம் திகதியன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குவிடம் விசாரணை மேற்கொண்டபோது, கடந்த காலங்களில் அவர் சிவனொளிபாதமலை அடிவாரத்தில் இருந்ததாகவும் அதன் பின்னர் மாத்தளை பகுதிக்கு சென்றதாகவும்,தற்போது வாழச்சேனை பகுதியில் உள்ள விகாரையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் கைதான பிக்குவிடம் தற்போது புனர்தாபனம் குறித்த விகாரை செய்ய உள்ளதாக தெரிவித்து அதிகளவான டிக்கட் புத்தகங்கள் வைத்திருந்ததாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor