புலிகளின் தலைவர் தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தடுத்தார் – வாசுதேவ!!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே வடக்கில் உள்ளவர்கள் தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தடுத்தார் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எஹலியகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது என்பது சாதகமான நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் படுவது என்பது அரசியலமைப்பில் காணப்படுவதாகவும் மேலும் தமிழ் சமூகத்தினர் தங்களுக்கு விருப்பமான மொழியில் தேசிய கீதம் பாட ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கடந்த அரசாங்கம் கொண்டுவந்த இந்த நடைமுறையினால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, இந்த முயற்சியினால் தமிழ் சமூகம் மகிழ்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor