
சீனாவில் உய்குர் இன முஸ்லிம்மை சேர்ந்த சுமார் ஐந்து இலட்சம் குழந்தைகளை, உறைவிட பாடசாலைகளுக்கு அனுப்ப சீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன அரசால் உய்கர் இனத்தவர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், இந்த செய்தி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
சின்ஜியாங் மாகாணத்தில் ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, 10 லட்சம் உய்குர் இன ஆண்களையும், பெண்களையும் பிரித்து, தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவிட்டு, அவர்தம் குழந்தைகளை தனியாக பிரித்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு, பெற்றோர் இருந்தும் தனித்துவிடப்பட்டுள்ள உய்குர் இன குழந்தைகளில், மேலும், 5 லட்சம் பேரை, உறைவிட பாடாசலைகளுக்கு, சீன அரசாங்கம் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சின்ஜியாங்கில் தனித்துவ அடையாளங்களோடு வாழும் உய்குர் இன மக்களில், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பெருமளவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இவ்வாறான மனித உரிமை மீறல்கள், பன்னாட்டளவில் புகார்களை சீனா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.
அண்மையில், சின்ஜியாங்கில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான உய்குர் ஆண்கள் கண்மூடித்தனமாக வழிநடத்தப்படுவதைக் காண்பிக்கும் கணொளியொன்றினை அமெரிக்கா வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.