லைகாவின் செல்லப் பிள்ளையான யோகி பாபு!!

பன்னிக்குட்டி படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் அடுத்தடுத்து நாயகனாக நடிக்கவுள்ளார் யோகி பாபு.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ‘மோஸ்ட்-வாண்டட்’ நடிகரான யோகி பாபுவின் கால்ஷீட் கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாக மாறி வருகிறது.

அடுத்தடுத்து இவரது கைவசமுள்ள படங்களின் நீளம் முன்னணி கதாநாயகர்களின் கால்ஷீட்டையே ஓவர்-டேக் செய்து வருகிறது.

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் யோகிபாபுவின் நடிப்பில் தர்மபிரபு சில நாட்களுக்கு முன் வெளியாகியுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கிருமி இயக்குநர் அனு சரண் இயக்கும் பன்னிக்குட்டி படத்தில் கருணாகரனுடன் இணைந்து நடித்து வருகிறார் யோகிபாபு.

மேலும் லைகா தயாரிக்கும் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார்.

யோகி பாபுவின் உழைப்பைக் கண்டு வியந்த லைகா நிறுவனம், அவரை தங்கள் தயாரிப்பில் உருவாகும் அடுத்தடுத்த இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுபோக லைகா தயாரிக்க இருக்கும் சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் இணையும் புதிய படத்திலும் யோகி பாபு பணியாற்றவுள்ளார்.

தற்போது யோகிபாபு, சக்தி சிதம்பரத்தின் ஜெயிக்கிற குதிரை, ஜி.வி. பிரகாஷுன் 100% காதல், கார்த்திக் கிரிஷின் சைத்தான் கி பச்சா, சாம் ஆண்டனின் கூர்கா, சதுரங்க வேட்டை 2, வெற்றி மாறன் – தனுஷின் அசுரன், ஜெயம் ரவியின் கோமாளி போன்ற படங்களில் முக்கிய மற்றும் பிரதான பாத்திரங்களில் நடித்து வருகிறார்.


Recommended For You

About the Author: Editor