சுவிஸ் தூதரக பணியாளருக்கு பிணை.

கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த பொய்யான தகவலை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபரை பிணையில் விடுவித்து கட்டளை வழங்கப்பட்டது.

இதன்போது அவரை, ரூபா 5 இலட்சம் கொண்ட ஆள் பிணைகள் இரண்டின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த டிசம்பர் 16ஆம் திகதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையான சுவிஸ் தூதரகப் பணியாளர், கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அங்கொடையிலுள்ள தேசிய மனநல சிகிச்சை நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர், மீண்டும் பிற்பகல் 4 மணியளவில் குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையானபோது, சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்ற விசாரணைப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.

கடந்த 16ஆம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்