
இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், பனிச்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஆஸ்திரிய எல்லைக்கு அருகேயுள்ள வால் செனேலஸ் என்ற பனிமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த சம்பவம் நடந்துள்ளது.
பனிச் சறுக்கு விளையாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் ஈடுபட்டிருந்த போது, தீடிரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதன்போது, இவர்கள் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
இதில், 5 வயது பெண்ணும், அவரது 7 வயதுமதிக்க தக்க இரண்டு மகள்களும் பனிச்சரிவில் மிக ஆழத்தில் சிக்கி கொண்டனர். இதில் ஐந்து மணி நேர மீட்பு பணியின் பின்னர் ஒரு பெண்ணும், இன்னொரு சிறுமியும் மீட்கப்பட்டனர். எனினும் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றது.
இதில் மற்றைய சிறுமி பனியில் இருந்து மீட்கப்பட்டு ஹலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரும் பின்னர் உயிரிழந்து விட்டார்.
அதே இடத்தில் பனிச்சரிவில் சிக்கிய தந்தையும், அவரது 11 வயது மகனும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் ஜேர்மனியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு பணியில் 70 பேரை கொண்ட குழுவும், 3 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக செனலேஸ் ஆல்பைன் மீட்பு படை தெரிவித்துள்ளது.