
பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதிகளில் பன்ஃபோன் புயல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 47ஆக அதிகரித்துள்ளது.
சேத விவரங்கள் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வரும் நிலையில், இந்தப் புயலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அத்தோடு, இந்த கடுமையான புயல் தாக்கத்தினால் சுமார் 43,000இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பலரை காணவில்லை என்றும், 2,000இற்கும் அதிகாமான வீடுகள் கடும் பாதிப்பை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் பன்ஃபோன் புயல் கிறிஸ்மஸ் தினத்தன்று தாக்கியது.
பின்ஃபோன் புயல் காரணமாக காற்று மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதில் மின்சாரக் கம்பிகள் பல இடங்களில் விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. தற்போது இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.