
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 25 தீவிரவாதிகள்கொல்லப்பட்டுள்ளதாகவும், 51 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
ஈராக்கில் இயங்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்தத் தாக்குதலை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சிரியாவின் மேற்குப் பகுதியில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக்கிலிருந்து 2014ஆம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வெளியேறியதால், ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது.
இதனைத் தொடர்ந்து மீண்டும். ஈராக் படையினருடன் சேர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதன்பலனாக கடந்த வருடம் உள்நாட்டுப் போரை ஈராக் வெற்றிகொண்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு இயங்கும் பிற தீவிரவாதக் குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.