கடற்படை தளங்களில் முகநூல் பயன்படுத்த தடை

இராணுவ இரகசியங்கள், எதிரி நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்திய கடற்படை இடங்களில் அதன் ஊழியர்கள் முகநூலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இந்திய கடற்படை தலைமையகம், தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடற்படை தலைமையகம், கடற்படை தளங்கள், கப்பல் பராமரிப்பு தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் இனிமேல் தொலைபேசிகளை பயன்படுத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படை இரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தியதாக அதன் ஊழியர்கள் 7 பேர் விசாகப்பட்டினத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவ்வாறான  செயல்கள் முகநூலில் மிக எளிதாக நடப்பதால் கடற்படை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்