ஈஸ்டர் தாக்குதல் குறித்து ரிஷாதிடம் 3 மணி நேர விசாரணை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடம் மூன்று மணி நேரத்திற்கு மேல் சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் தீர்மானித்திருந்தனர்.

அதன்படி இன்று திங்கட்கிழமை) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு சி.ஐ.டி. கடந்த வாரம் நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தது.

மேலும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடமிருந்தும் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சி.ஐ.டி. அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்