அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அத்தோடு, தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சி.சி.ரி.வி. காணொளி  வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், போர்ட் வொர்த் அருகே உள்ள தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, உள்ளே நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கிருந்த பொலிஸார் குறித்த துப்பாக்கித்தாரியை சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவம் குறித்து டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “வழிபாட்டுத் தலங்கள் புனிதமானவை. துப்பாக்கிச்சூடு நடத்தியவரை வீழ்த்தி மேலும் உயிர் இழப்பைத் தடுக்க உதவிய தேவாலய உறுப்பினர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்