நக்சலாக சாய் பல்லவி!!

பாகுபலி வில்லன் ராணா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சாய் பல்லவி நக்சல் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் நடித்த என்ஜிகே படத்தில், தன் கதாபாத்திரத்தால் கவனம் பெற்ற சாய் பல்லவி தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பாகுபலி வில்லன் ராணா கதாநாயகனாக நடிக்கும் பீரியட் மூவியில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.

விரத பர்வம் 1992 என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தை ‘நீடி நாடி ஒக்கே கதா’ என்ற படத்தை இயக்கிய வேணு உடுகுலா இயக்குகிறார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாரிப்பள்ளி என்ற கிராமத்தில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

1990 காலகட்டத்தில் உருவாகும் இப்படம் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சமூகக் கருத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. பாகுபலிக்காக உடல் எடையை அதிக அளவில் ஏற்றிய ராணா, விரத பர்வத்திற்காக அப்படியே நேரெதிராய் உடல் எடையை குறைத்துள்ளார்.

மேலும், அரசியல் தலைவராகவும் நடித்து வருகிறார். மற்றொரு சிறப்பாக சாய் பல்லவி இப்படத்தில், காதல் தோல்விக்காக கலங்கும் சாதாரணப் பெண்ணாக இருந்து நக்சலைட்டாக மாறும் கதாபத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

விஷ்ணு விஷால், தபு, ஜரீனா வஹாப், ஈஸ்வரி ராவோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சுரேஷ் பாபு – சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor