வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சாள்ஸ் நியமனம்.

வடக்கு மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் இணைத்து ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அமைச்சரவை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஒப்புதலை வழங்கியிருந்தது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் வடக்கு மாகாண ஆளுநராக  சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக அவர் தனது கடமைகளை அடுத்த சில தினங்களில் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்