
மாத்தளை- உக்குவளை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
தாய், தந்தை, மருமகள் ஆகிய மூவருமே இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
நேற்று இரவு பத்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பன்றிக்கு வைத்த சட்டவிரோத மின்சார பொறியில் சிக்கியே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.