
சர்வதேச கராத்தே போட்டி வென்னப்புவ – அல்பிரட் பீறீஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்தும் இந்தோனேசியாவிலிருந்தும் கராத்தே அணியினர் வருகை தந்துள்ளனர்.
மேலும், இப்போட்டிகளில் பெருமளவிலான கராத்தே வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்கள்.
குறித்த போட்டி இலங்கையில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியாகக் காணப்படுகின்றது.
இலங்கை கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான் சிசிர குமார, சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநஷனலின் பிரதம ஆசிரியர் சிஹான் அன்ரோ டினேஸ் உள்ளிட்டவர்கள் இந்தோனேசியா அணியின் பிரதம பயிற்றுனர் சென்செய் ரிக்கி மற்றும் இந்தோனேசியா அணியை வரவேற்றுள்ளனர்.