முருகன்- நளினி உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.

வேலூர் சிறையில் 9வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும்  நளினி- முருகன் ஆகிய இருவரையும் மதுரை சிறைக்கு மாற்றுவதற்கு  ரிட் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனுக்கு உறவினர்கள் கொண்டுவரும் உணவுப்பொருட்களை அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கடந்த 21ஆம் திகதி முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், “முருகனுக்கு 2 போத்தல்  குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. காலை, மாலையில் தினமும்  வைத்தியர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்” என்றனர்.

அதேபோன்று முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியதாவது, சிறையில் முருகன், தனது ஆன்மீக வாழ்க்கையை சிறைத்துறையினர் சிதைத்துவிட்டதாக கூறினார். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். சிறையில் சந்திக்கும்போது மனைவி கொடுக்கும் உணவையும் தடுக்கின்றனர். புழல் சிறைக்கு மாற்ற கோரியதற்கும் நடவடிக்கை இல்லை.

உண்ணாவிரதம் தொடங்கும் முன்பு 64 கிலோ இருந்த முருகன் தற்போது 22 கிலோ எடை குறைந்து 42 கிலோவாக உடல் மெலிந்துள்ளார். அவரை தற்கொலைக்கு தூண்டுவதால் நளினி- முருகன் இருவரையும் மதுரை சிறைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என  கூறினார்.


Recommended For You

About the Author: ஈழவன்