வவுனியாவில் பேருந்து விபத்து – 08 பேர் காயம்

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 8 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கல்லையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தொன்று கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது பேருந்தில் பயணித்தவர்களில் 4 இராணுவத்தினர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்