நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் நிறைவு!

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள ஆசனங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

புதிய நாடாளுமன்றத்தின் அமர்வு 2020 ஜனவரி 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. புதிய நாடாளுமன்றம் கூடும் போது சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸவை அறிவிப்பார்.

இதனையடுத்து சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சி வரிசையில் 8 வது ஆசனத்தில் அமர்வார். சிரேஸ்ட நிலையின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க 7ஆவது ஆசனத்தில் அமர்வார்.

அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்வரிசை ஒதுக்கப்படும். மஹிந்த ராஜபக்சவுக்கு 7ஆவது ஆசனம் ஒதுக்கப்படும்.

அவைத்தலைவர் மற்றும் பிரதம கொரடா ஆகியோருக்கு 5ம், 6ம் ஆசனங்கள் ஒதுக்கப்படும்.அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிரேஸ்ட நிலை அடிப்படையில் ஆசனங்களில் அமர்வார்கள்.

ஜேவிபி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு , முன்னாள் அமைச்சர்கள், ரிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் ஆசன ஒழுங்கில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது


Recommended For You

About the Author: Editor