
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தனது டொரிங்கன் வீட்டில் மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சந்திரிக்கா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சந்திரிக்காவுக்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்வதற்காக பல அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.