யேமனில் இராணுவ அணிவகுப்பு மீது ஏவுகணைத் தாக்குதல்!!

யேமனின் தெற்கு மாகாணத்தில் இராணுவ அணிவகுப்பின் போது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

அல்-தலேயா மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமில் பயிற்சி முடிந்து வெளியேறும் இராணுவ வீரர்களின் அணிவகுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையிலேயே குறித்த அணிவகுப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை ஹவுத்தி போராளிகள் மேற்கொண்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் அரசின் ஆதரவுடன் யேமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள்மீது உள்நாட்டு அரசப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகளும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கடந்த ஓகஸ்ற் மாதத்திலும் இதேபோல் ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor