முல்லைத்தீவு கடலில் தந்தை மகன் சாவு!!

முல்லைத்தீவு, நாயாறு கடற்கரையில் குளிக்கச் சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தந்தையின் சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மகனின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றியவரைப் பார்ப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோர் சென்ற நிலையில் இன்று பிற்பகல் கடலில் குளிக்கச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெலனிய-பலுகம ரக்கன் தலுவ வீதியில் வசித்துவந்த வருண கமகே (55வயது) மற்றும் அவரது மகனான லபிது கமகே (16வயது) ஆகிய இருவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor