ஆரவ்வை மீட்ட ஆஷிமா!!

கொலைகாரன் படத்தில் கவனம் பெற்ற ஆஷிமா நர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ்க்கு ஜோடியாக ராஜபீமா படத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கும் இப்படத்தில் ஓவியா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதுடன் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

யானை ஒன்றை மையமாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய ஆஷிமா நர்வால், “இந்தப் படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவராக எனது கதாபாத்திரம் உருவாகியுள்ளது. ஆரவ்வின் காதலியாக நடித்துள்ளேன். பல்வேறு பரிமாணங்கள் உள்ள கதாபாத்திரம் இது.

மனிதர்களுடன் இணைந்து நடிப்பதே சவாலான காரியமாக இருக்கும்போது இதில் ஒரு யானையுடன் நடித்துள்ளேன்” என்று கூறியுள்ளார். “யானை இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் பாங்காக்கில் படமாக்கப்பட்டன.

யானையை பார்த்துக்கொள்ள ஒரு டீம் வந்தது. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.

இதனால் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலமாகவே எங்களுக்கு வேண்டியதை கேட்டுதெரிந்துகொண்டோம். குறிப்பிட்ட ஷாட் எடுக்கும் போது ஆரவ்வை என்பக்கம் இழுத்தேன்.

அப்போது ஒரு யானை அவரை அதன் பக்கம் இழுத்தது. இருதரப்புக்குமிடையே பெரிய போட்டியே நிலவியது” என்று கூறினார்.

சைமன் கே கிங்க் இசையமைக்க, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார் கருந்தேள் ராஜேஷ். மதன் கார்க்கி பாடல்களை எழுத, சுரபி ஃபில்ம்ஸ் சார்பாக எஸ். மோகன் இதைத் தயாரிக்கிறார்.


Recommended For You

About the Author: Editor