ஆபத்தாக மாறும் செயற்கைக் கோள்கள்

தனியார் நிறுவனங்கள் செலுத்தும் ஆயிரக்கணக்கான சிறு செயற்கைக் கோள்களால், வானியல் ஆய்வு பாதிக்கப்பட்டு, பூமிக்கு வரும் ஆபத்துக்களை கண்டு பிடிக்க முடியாமல் போய் விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச இணையதள தொடர்பை அதிகரிக்கும் நோக்கில் அமேசான் (Amazon), ஸ்பேஸ் எக்ஸ் (Space X) போன்ற நிறுவனங்களின் செயற்கைக் கோள்கள், பிரபஞ்சத்தை ஆய்வு செய்ய பயன்படும் ரேடியோ அலைவரிசைகளையும், டெலஸ்கோப் பிம்பங்களையும் பாதிக்கும் என்று பிரிட்டனின் பிரபல வானியல் விஞ்ஞானி தாரா பட்டேல் அச்சம் தெரிவித்திருக்கிறார்.

பூமியை நோக்கி வரும் ஆபத்தான விண்கற்கள் குறித்த எச்சரிக்கையைப் பெறுவதில் இந்த செயற்கைக் கோள்கள் பெரும் தடையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் 1200 சிறு செயற்கைக் கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor