இங்கிலாந்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் எழுதிய காதல் கடிதம் !

பிரெக்ஸிட் ஒப்பந்தத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறவுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இங்கிலாந்துக்கு சுவாரஸ்யமான காதல் கடிதமொன்றை எழுதியுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் துணைத் தலைவர் ஃப்ரான்ஸ் டிமெர்மான்ஸ் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
‘குடும்ப உறவுகளை ஒருபோதும் துண்டிக்க முடியாது’ என்ற தலைப்பில் இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது, ‘இங்கிலாந்தை நான் மிகவும் விரும்புகிறேன். அது உங்களுக்கும் நன்றாக தெரியும். ஒரு பழைய காதலன் போல, உங்கள் பலம் மற்றும் பலவீனம் எல்லாவற்றையும் நான் அறிவேன்.
நீங்கள் இப்போது விலகிச் செல்ல முடிவு செய்திருக்கிறீர்கள். அது மிகவும் வேதனையளிப்பதாக இருந்தாலும், அந்த முடிவை நான் மதிக்கிறேன்.
நாங்கள் எங்கும் விலகிச் செல்லவில்லை. திரும்பி வருவதாக இருந்தால் நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுவீர்கள்’ என எழுதியுள்ளார்.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தை வெளியேற்றுவதற்காக, போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கமைய இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற உள்ளது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor