விபத்துக்குள்ளான சிறிய விமானம்! – விமானி பலி..!!

சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த விமானி உயிரிழந்துள்ளார்.

Nord மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று சனிக்கிழமை நண்பகல் வேளையில் Nord மாவட்டத்தின் Valenciennes நகரில் உள்ள Prouvy எனும் விமான தளத்தில் (சிறிய ரக விமான தளம்) இருந்து குறித்த விமானம் புறப்பட்டுள்ளது.

புறப்பட்ட சில நொடிகளில் தளத்தில் இருந்து சில மீற்றர் தொலைவில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் அதன் உரிமையாளரான விமானி மாத்திரமே தனியே பயணித்துள்ளார். 20 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு விமானியின் உடல் மீட்கப்பட்டது.


Recommended For You

About the Author: Editor