வெள்ளத்தில் மூழ்கும் மும்பை!!

சென்னை மாநகரம் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் மும்பை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 48 மணிநேரத்தில் மும்பையில் 540 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இன்னும் மழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் தும்பை மீண்டும் வெள்ள அபாயத்தில் சிக்கியுள்ளது.

நேற்று திங்கள் கிழமை ஒரு நாள் மட்டும் 90 மில்லி மீட்டருக்கு மேல் மும்பை நகர் பகுதியில் மட்டுமே பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் மிகத் தீவிர மழை ஜூலை 2 4 5 ஆகிய தினங்களில் மும்பை தானே பல்கர் பகுதிகளில் பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

மும்பையின் போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏன் அரசு நிறுவனங்களுக்கும் கூட விடுமுறை விடப்பட்டுள்ளன.

மும்பை மலையை ஒட்டி அமைச்சர் பியூஸ் கோயல் இப்பொழுது வாங்கவும் ரயில்கள் இயக்கம் மற்றும் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மேற்கு ரயில்வே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மும்பை மாநகராட்சி ஆணையர் ப்ரவீன் பர்தேஷி ஊடகங்களுக்குப் பேசுகையில், “மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

இன்னும் சில தினங்களுக்குக் கடுமையான மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை எச்சரிக்கை கிடைத்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் இப்போதைக்கு மூடப்படுகின்றன.

திறக்கும் சூழல் ஏற்பட்டால் நாங்களே அறிவிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மும்பை மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் ஒவ்வொரு வார்டுக்கும் அமைக்கப்பட்டு அதன் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் இந்த எண்களுக்கு அழைத்து உதவி கோரலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இந்தியாவின் வர்த்தக தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் மும்பையில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வெளியூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கிறார்கள்.

நிலையில் மும்பையின் வெள்ளத்தைத் எதிர்கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட மகாராஷ்டிரா அரசு மாநகராட்சி நிர்வாகமும் தீவிரமாகியுள்ளன.

மும்பை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆய்வு செய்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், “மும்பை மாநகரத்தின் டிரைனேஜ் கொள்ளளவை விட மூன்று-நான்கு மடங்கு மழை பெய்திருக்கிறது.

இன்னும் பெய்து வருகிறது. தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

இதுவரை 18 பேர் மும்பை மழை காரணமாக இறந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் தண்ணீர்த் தாண்டவத்தின் கோரத்தை உணர்த்துகிறது.


Recommended For You

About the Author: Editor