
தொடருந்து கடவை ஒன்றை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் விபத்துக்குள் சிக்கியுள்ளார்.
Savoy நகரில் நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள TER தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கடவை ஒன்றை மகிழுந்தில் பயணித்த பெண் ஒருவர் கடக்க முற்பட்டார்.
Albertville-Chambéry நகர் நோக்கி குடும்பமாக பயணித்த பெண் சாரதி, கடவையை கடக்க முற்பட்டபோது, எதிர்பாராவிதமாக தொடருந்துடன் மோதியது. 15:30 மணிக்கு இவ்விபத்து பதிவானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகிழுந்துக்குள் 43 வயதுடைய பெண், 46 வயதுடைய அவரது கணவர், 73 வயதுடைய முதியவர் மற்றும் 5 வயது மகள் ஆகியோர் பயணித்துள்ளனர்.
விபத்தில் மகிழுந்தை ஓட்டிச்சென்ற பெண் பலத்த காயங்களுக்கு உள்ளானார். மற்றைய மூவருக்கும் இலேசான காயங்கள் ஏற்பட்டது.
TER தொடருந்து மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணித்திருந்ததாகவும், அதேவேகத்தில் மகிழுந்துடன் மோதியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.