இலங்கையர்களை ஏமாற்றும் மர்ம கும்பல்!

இலங்கையர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் வந்துக் கொண்டிருந்த வெளிநாட்டு தவறிய அழைப்புகளை (Missed call) தொடர்ந்து மற்றுமொரு மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு தவறிய அழைப்புகள் வருவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாவனையாளர்களுக்கு அறிமுகமில்லாத இலங்கை தொலைபேசி இலக்கங்களில் இருந்து பல்வேறு வகையான குறுந்தகவல்கள் கிடைப்பதாக தெரியவந்துள்ளதென இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கையடக்க தொலைபேசி பயனாளர்கள் பெறுமதியான பரிசு வென்றுள்ளதாகவும், பரிசினை பெற ஒரு பணத்தொகையை செலுத்த வேண்டும் என குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
இவ்வாறு மோசடியான முறையில் வரும் குறுந்தகவல்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் மக்கள் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறுந்தகவல்களில் கோரும் தனிப்பட்ட தகவல்கள் எதனையும் வழங்க வேண்டாம். அவர்கள் வழங்கும் வங்கி கணக்கு இலக்கத்திற்கோ அல்லது bitcoin walletஇற்கோ பணத்தை வழங்க வேண்டாம் என இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor