கொடூர கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் காயம்

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியூயோர்க் நகரின் வடக்கே உள்ள ஒரு தேவாலயத்தில் இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் தற்போது அதிகளவான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கிலிருந்து 35 மைல் வடக்கே சுமார் 18,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட மொன்சியிலேயே இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது

Recommended For You

About the Author: Editor