மட்டக்களப்பு கடற்கரையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு- பாலமுனை நடுவோடைக் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தினை அவதானித்த அப்பகுதி மீனவர்கள், காத்தான்குடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வெளிநாட்டவருடையது என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், சில தினங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தடவியல் புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor