
பயணிகளைப் போன்று பஸ் உரிமையாளர்களின் வசதிக்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தென் மாகாண தனியார் பஸ் நிறுவன பணிப்பாளர் சபையுடன் தங்காலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது அனுமதி சீட்டுக்கு பதிலாக முன்கூட்டியே பணம் செலுத்தக்கூடிய அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் தற்போழுது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.