விஜய் மல்லையாவின் வழக்கு இன்றுவிசாரணைக்கு!!

இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாதென தொழிலதிபரான விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனைபெற்றுவிட்டு, அதனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை, நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது விஜய் மல்லையா பல முறையீட்டு மனுக்களை தொடர்ந்தார். ஆனால் அவைகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பின் சட்டத்தரணி, மனுவொன்றை தாக்கல் செய்தார்.

குறித்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஜோர்ஜ் லெக்காட், அண்ட்ரூ போப்பிள்வெல் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது இந்திய அரசு மற்றும் மல்லையா தரப்பு சட்டத்தரணிகள் கூடுதல் வாதங்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor