காப்பற் வீதியாகிறது கொடிகாமம் – பருத்தித்துறை வீதி!!

கொடிகாமம் – பருத்தித்துறை (AB31) வீதி அகலிப்பு செய்யப்பட்டு காப்பற் வீதியாக புனரமைப்பு செய்யும் பணி நடைபெறுகிறது.

உலக வங்கியின் உதவியுடன் மெகா (MAGA) நிறுவனத்தால் இந்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதி புனரமைப்பு வேலைகள், வீதி அகலிப்பு மதகுகள் அமைக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட நிலையில் தற்போது காப்பற் இடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

தற்போது இந்த வீதி காப்பற் வீதியாக புனரமைப்பு செய்யப்படுவதையிட்டு அப்பகுதி மக்கள் மற்றும் வீதியால் பயணிப்பவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor