வெளிநாடுகளுக்கு விசா கட்டணம் நீக்கம்!

48 நாடுகளுக்கு விசாக் கட்டணம் நீக்கப்பட்டமையினால் இலங்கைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் விசா கட்டணத்தை நீக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்தது.

இதன் காரணமாக 6000 மில்லியன் ரூபா வருமானத்தை இலங்கை இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 48 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டணம் அறவிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

ஒஸ்ட்ரியா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, கம்போடியா, சீனா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இந்தியா, இந்தோனேஷியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லத்வியா, லிதுவேனியா, லக்சம்பேர்க், மலேஷியா, மோல்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்த்துக்கல், ரொமேனியா, ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்லோவாகியா குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, உக்ரைன் மற்றும் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கே இவ்வாறு விசாக் கட்டணம் நீக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor