ரிசாத் கைது செய்யப்படாமை ஆச்சரியத்தை தருகிறது!

தற்போதைய அரசாங்கம் முன்னர் குற்றம் சுமத்தியப்படி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கைது செய்யப்படவேண்டும். எனினும் அவர் கைதுசெய்யப்படமாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் வில்பத்து தேசியப்பூங்காவை அழித்ததாக நடப்பு அரசாங்கத் தரப்பினர் முன்னர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும் தற்போது அந்தக்குற்றச்சாட்டின் பேரில் ரிசாத் பதியுதீன் கைதுசெய்யப்படாமை ஆச்சரியத்தை தருகிறது என்றும் குறிப்பிட்டார்.

முன்னைய அரசாங்கம் ராஜித சேனாரத்ன மற்றும் பாட்டலி தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் ஹிருனிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

2015இல் ஆட்களை கடத்திச்சென்றதாக கூறப்படும் வேனின் இரண்டு சாரதிகள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் முன்னிலைப்படுத்தியமையே ராஜித மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.

எனினும் குறித்த இருவரும் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே அந்த செய்தியாளர் சந்திப்பை ராஜித ஏற்பாடு செய்ததாக ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: Editor