மன்னாரில் கைப்பற்றப்பட்டது கேரள கஞ்சா!!

மன்னார் – கொன்னையன் குடியிருப்புப் பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 10 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கொன்னையன் குடியிருப்புப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளில் இருந்து இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார்சைக்கிளில் 5 பொதிகளில், பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகளை அறிந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மோட்டார்சைக்கிளுடன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor