பத்து உயிர்கள் பலியானது புகைவண்டியால்!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயிலுடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாண்டிக்குளம் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணியளவில் ரயில் கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளே, கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளன.

இதேவேளை, கடந்த வாரம் முகமாலை பகுதியில் 21 ஆடுகள் ரயில் கடவையில் ரயிலுடன் மோதி உயிரிழந்திருந்தன.

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலை காரணமாக கால் நடைகள் ரயில் கடவைகளிலுள்ள பயிர்ச் செடிகளை உண்ணுவதற்காகச் செல்கின்றபோது, இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor