வரலாறு காணாத பனிப்பொழிவு : உ.பியில் 20 பேர் உயிரிழப்பு

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி  கான்பூர் மாவட்டத்தில் 10 பேரும்,  வாரணாசி, மகோபா மாவட்டங்களில் தலா 4 பேரும்  சிராவஸ்தி,  பண்டா, மெயின்புரி மாவட்டங்களில் தலா 2 பேரும்  லக்னோவில் ஒருவரும் உயிரிழந்துள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத மிகக்குறைந்த வெப்பநிலையாக இன்று (சனிக்கிழமை) காலை 2.4 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 3.6 டிகிரி செல்சியஸ் ஆகவும்,  அதிகபட்சமாக 11.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை பனிக்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் டெல்லியின் வரலாற்றில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  இந்த டிசம்பர் மாதம்,  மிகக் குளிரானதாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்