ஒரு மில்லியன் டொலர்களுடன் சிக்கிய இலங்கையர்கள்!

ஒரு தொகை அமெரிக்க டொலர்களுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்லகமுக – மொல்லிய பொதான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து ஒரு மில்லியன் மதிப்புள்ள பித்தளை தகடுகள், பித்தளை நாணயங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை பொலிஸ் அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த நாணயத்தாள்கள் அமெரிக்க மத்திய வங்கியினால் வெளியிடப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றிற்கான ஆவணங்களும் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor