பேருந்து தரிப்பிடத்தை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

னிக்கிழமை காலை Asnières-sur-Seine பேருந்து தரிப்பிடத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

24 ஆவது நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் இன்று மாபெரும் போராட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், Asnières-sur-Seine, (Hauts-de-Seine) நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்துகளை தரிப்பிடத்தில் இருந்து புறப்படவிடாமல் முடக்கியதால், பேருந்துகள் புறப்பட முடியாமல் சிக்கியிருந்தன.

இதே நகரில் உள்ள இரண்டாவது தரிப்பிடமும் முடக்கப்பட்டது. காலை 10 மணிவரை நீடித்த இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் ஓரளவு முடிவுக்கு வந்தது.

போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து பல தடவைகள் இந்த பேருந்து தரிப்பிடம் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor