மஞ்சள் மேலங்கி போராளிக்கு மூன்று வருட சிறை..!!

காவல்துறை அதிகாரிகளை தாக்கிய மஞ்சள் மேலங்கி போராளி ஒருவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை Nancy நகர குற்றவியல் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி (2018 ஆம் ஆண்டு) ஒரு சனிக்கிழமை நாளில் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது 34 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறையினர் மீது வெடி பொருட்களை வீசியுள்ளார்.

இதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்திருந்தனர்.

Lorraine நகரைச் சேர்ந்த குறித்த 34 வயது நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பின்னர் அவருக்கு மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: Editor