
நியூசிலாந்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 67,000 டொலர் வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மறுபயனீடு செய்யக்கூடிய பைகளைப் பயன்படுத்துமாறு நியூசிலாந்து அரசாங்கம் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பிளாஸ்டிக் பாவனை காரணமாக மில்லியன் கணக்கிலான கடல்வாழ் உயிரினங்களும் பறவைகளும் பாதிக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் தூய்மைக்கேடு பூமியையும் பெரிய அளவில் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது 80க்கும் மேற்பட்ட நாடுகள் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.