மீண்டும் திறக்கப்படும் விமான நிலையம்..!!

வெள்ளத்தில் மூழ்கியிருந்த Ajaccio விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 21 ஆம் திகதியில் இருந்து மூடப்பட்ட இந்த விமான நிலையம், இன்று சனிக்கிழமை இரவு திறக்கப்பட உள்ளது. கடந்த ஒருவார காலமாக குறித்த விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்திருந்தது.

விமான நிலைய ஓடுதளம் முற்றாக சேதமடைந்த நிலையில், திருத்தப்பணிகள் இடம்பெற்று மீண்டும் இயக்கப்பட உள்ளன.

குறித்த Ajaccio-Napoléon விமான நிலையத்தில் இருந்து Bordeaux நகருக்கு இன்று சனிக்கிழமை விமானம் இயக்கப்பட்டது. புதுவருட பயணத்தை பயணிகள் அச்சமின்றி மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor