650 அடி நீளமான கொடியுடன் போராடும் மக்கள்!

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 650 அடி நீள தேசியக்கொடியுடன் இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தியுள்ளன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இன்று (சனிக்கிழமை) குறித்த பேரணியை முன்னெடுத்துள்ளன.

இதில்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை ஆலந்தூரிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி  குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் தமிழகத்திலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor